புது டெல்லி: டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடியிருப்பு) குடியிருப்பில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையங்களில் தங்கியிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. சட்டவிரோதமாக குடியேறிய புதிய ரோஹிங்கியாக்கள் EWS குடியிருப்புகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை என்று HMO ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார். நாட்டில் புகலிடம் கோரியவர்களை இந்தியா எப்போதும் வரவேற்றுள்ளது. ஒரு முக்கிய முடிவில், அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் உள்ள EWS குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள், UNHCR IDs மற்றும் 24 மணிநேரமும் வழங்கப்படும் என ட்வீட் செய்தார்.
India has always welcomed those who have sought refuge in the country. In a landmark decision all #Rohingya #Refugees will be shifted to EWS flats in Bakkarwala area of Delhi. They will be provided basic amenities, UNHCR IDs & round-the-clock @DelhiPolice protection. @PMOIndia pic.twitter.com/E5ShkHOxqE
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 17, 2022
மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, உள்துறை அமைச்சரின் அலுவலகம் உடனடியாக பதில் அளித்தது. புதுதில்லியில் உள்ள பக்கர்வாலாவில் உள்ள ரோஹிங்கியா சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு EWS குடியிருப்புகளை வழங்க உள்துறை அமைச்சகம் (MHA) எந்த உத்தரவும் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. சட்டவிரோத குடியேறிய ரோஹிங்கியாக்கள் தற்போதைய இருக்கும் இடத்திலேயே இருப்பதை உறுதிப்படுத்துமாறு ஜிஎன்சிடிடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களை நாடு கடத்துவது குறித்து வெளியுறவு அமைச்சகம் மூலம் எம்ஹெச்ஏ ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது என்பும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ரோஹிங்கியாக்களை புதிய இடத்திற்கு மாற்ற டெல்லி அரசாங்கத்தின் முடிவு என மத்திய உள்துறை அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
With respect to news reports in certain sections of media regarding Rohingya illegal foreigners, it is clarified that Ministry of Home Affairs (MHA) has not given any directions to provide EWS flats to Rohingya illegal migrants at Bakkarwala in New Delhi.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) August 17, 2022
சட்டவிரோத குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்தும் வரை தடுப்பு மையத்தில் வைக்க வேண்டும். டெல்லி அரசு தற்போது இருக்கும் இடத்தை தடுப்பு மையமாக அறிவிக்கவில்லை. உடனடியாக அதைச் செய்யுமாறு உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ரோஹிங்கியாக்கள் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த திரிபுரா மற்றும் மேகாலயா முன்னாள் கவர்னர் ததாகத் ராய், பாஜக அரசு தற்கொலை நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
This is INCREDIBLE Sir! Rohingiya Muslims are illegal infiltrators,not refugees,under the CAA! They are distinctly unwelcome even in Muslim-majority Bangladesh! Have we bid goodbye to all our principles? Are we about to light our own funeral pyre! @narendramodi @PMOIndia https://t.co/yUQ6qawiRP
— Tathagata Roy (@tathagata2) August 17, 2022
அதபோல விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தலைவர் அலோக் குமார், டெல்லியின் பல பகுதிகளில் வசிக்கும் இந்துக்களின் நிலை, ரோஹிங்கியாக்களுக்கு வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் போலல்லாமல், "மோசமாக" இருப்பதாகக் கூறியிருந்தார். இந்து அகதிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. ரோஹிங்கியாக்கள் குறித்து ளுக்கு அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் எனக் கூறியிருந்தார்.
தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ரோஹிங்கியாக்களை தங்க வைப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தை அடுத்து, டெல்லியின் பக்கர்வாலா கிராமத்தில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) குடியிருப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டெல்லி அரசு, டெல்லி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். EWS வகையைச் சேர்ந்த மொத்தம் 250 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு தற்போது மதன்பூர் காதர் முகாமில் வசிக்கும் 1,100 ரோஹிங்கியாக்களும் தங்கவைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ