ஜம்மு-காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்? - SC

காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

Last Updated : Oct 24, 2019, 12:27 PM IST
ஜம்மு-காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்? - SC title=

காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசநலன் கருதி சிலைகட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்றாலும் அதை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. 

மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், ஏறக்குறைய 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்தவர்களை படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொலைத்தொடர்பு துண்டிப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேச நலன் கருதி சில கட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்றாலும், அதை மறு பரிசீலனை செய்வது மிக அவசியம் என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.  

 

Trending News