70வது குடியரசு தினம்: வாகா அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம்!!

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

Last Updated : Jan 26, 2019, 02:22 PM IST
70வது குடியரசு தினம்: வாகா அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம்!! title=

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

இந்தியாவின் 70 வது குடியரசுத் தினத்தில் தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றினார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதே சமயம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி, பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரியிடம் இனிப்பு வழங்க, பாகிஸ்தான் தரப்பிலும் இந்தியாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Trending News