புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து 80 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொதுத்துறை பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விலை அறிவிப்பின்படி, தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.01லிருந்து ரூ.97.81 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.27ல் இருந்து ரூ.89.07 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது
கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.1.60 அதிகரித்துள்ளது. தற்போது மூன்றாவது முறையாக 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.40 உயர்த்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையாகிறது.
நான்கு பெருநகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை
- டெல்லி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.97.81 மற்றும் டீசல் ரூ.89.07
- மும்பை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.112.51 மற்றும் டீசல் ரூ.96.70
- சென்னை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.71, டீசல் ரூ.93.75
- கொல்கத்தா பெட்ரோல் ரூ.107.18 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.92.22
இன்றைய சமீபத்திய கட்டணங்களை இப்படித் தெரிந்து கொள்ளலாம்
தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் (டீசல் பெட்ரோல் விலையை தினமும் சரிபார்ப்பது எப்படி). இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் ஆர்எஸ்பியை 9224992249 என்ற எண்ணுக்கும், பிபிசிஎல் நுகர்வோர்கள் ஆர்எஸ்பியை 9223112222 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம். அதே நேரத்தில், HPCL நுகர்வோர் HPPrice ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR