ரிசர்வ் வங்கியின் 2-வது மாதாந்திர நாணய கொள்கை கூட்டம் இன்றும் நடைபெற்றது. வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.
நாணய கொள்கை கூட்டத்தில் முக்கிய அம்சங்கள்:-
* ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதத்தில் நீடிக்கிறது.
* ரெப்போ ரேட் 6.25 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதத்திலும் நீடிக்கிறது.
* எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 20 சதவீதமாக இருக்கும்.
* 2017-18-ம் முதல் காலாண்டில் பணவீக்கம் 2 முதல் 3.5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 3.5 முதல் 4.5 சதவீதம் வரை இருக்கும் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினால் வங்கிகள் வட்டியைக் குறைக்க வாய்ப்பில்லை. இதனால் வீடு மற்றும் வாகன வட்டியில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.