பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய ஆர்பிஐ கட்டுரை: மும்பை: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாடு முழுதும் பல வித சர்ச்சைகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல மாநில அரசுகள் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலில் கொண்டு வந்துள்ளன். எனினும், இந்த மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு இடியாக வந்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாநிலங்கள் மீண்டும் அமல்படுத்துவது “ஒரு ஆபத்தான செயல்” எனவும் இது மாநிலங்களின் நிதி அழுத்தத்தை நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு நிலையற்ற நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்களின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசித் சோலங்கி, சோம்நாத் சர்மா, ஆர்.கே. சின்ஹா, எஸ்.ஆர். பெஹரா மற்றும் அத்ரி முகர்ஜி ஆகியோரின் கட்டுரையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (ஓபிஎஸ்) ஒட்டுமொத்த நிதிச் சுமை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை விட 4.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஓய்வூதிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டது.
ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கருத்து அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பிஎஸ்-லிருந்து ஓபிஎஸ்-க்கு மீண்டும் மாறுவதாக அறிவித்தன.
இது தொடர்பாக சில ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், “பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) வரையறுக்கப்பட்ட நன்மைகளை (DB) கொண்டுள்ளது. அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) பங்களிப்புகளை வரையறுத்துள்ளது. OPS சில குறுகிய கால கவர்ச்சிகர அம்சங்களைக் கொண்டிருந்தாலும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு இது சவால்களை முன்வைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
"ஓபிஎஸ்-ஐ மீட்டெடுப்பதற்கான முடிவுகளை எடுக்கக்கூடிய மாநிலங்களின் ஓய்வூதியத்தில் குறுகிய காலக் குறைப்பு, நீண்ட காலத்திற்கு எதிர்காலத்தில் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகளின் மிகப்பெரிய அதிகரிப்பால் மறைந்துவிடும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது நிதி ரீதியாக ஒரு ஆபத்தான நடவடிக்கை. இது நீண்ட கால திட்டமிடலில் ஒரு மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தக்கூடும்” என இந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் மாநிலங்களுக்கு உடனடி ஆதாயம் என்னவென்றால், தற்போதைய ஊழியர்களின் என்பிஎஸ் பங்களிப்பிற்கு அவர்கள் செலவிட வேண்டியதில்லை, ஆனால் எதிர்காலத்தில், நிதி ஆதாயம் இல்லாத பழைய ஓய்வூதிய திட்டம் அந்த மாநிலங்களின் நிதி நிலையில் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.” என இதில் கூறப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதன் மூலம் வருடாந்திர ஓய்வூதியத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவிகிதத்தை மட்டுமே மாநிலங்கள் சேமிக்கும், ஆனால் 2040 க்குப் பிறகு வருடாந்திர GDP யில் 0.5 சதவிகிதம் சராசரியாக கூடுதல் ஓய்வூதியச் செலவை அதிகரிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் DB திட்டங்களைக் கொண்ட பல வளர்ந்த பொருளாதாரங்கள் அதன் குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதால் அதிகரித்த பொதுச் செலவினங்களை எதிர்கொண்டுள்ளன. மேலும் மாறிவரும் மக்கள்தொகை விவரம் மற்றும் நிதிச் செலவுகள் ஆகியவை தங்கள் ஓய்வூதியத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய உலகெங்கிலும் உள்ள பல பொருளாதாரங்களை நிர்பந்தித்துள்ளன.
“மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது நிதி ரீதியாக தாக்குபிடிக்க முடியாததாக இருக்கும். இருப்பினும் அது அவர்களின் ஓய்வூதியத்தில் உடனடி வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்" என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ