ராஜ்யசபா தேர்தல் 2024: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் முதல் முறையாக மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனியா காந்தி தற்போது உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார். தற்போது மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளதால், அவர் மக்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சோனியா காந்தி உட்பட பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல் 2024: மூன்று பேர் தேர்வு
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முதன்மை செயலாளரும், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான மஹாவீர் பிரசாத் சர்மா கூறுகையில், மூன்று இடங்களுக்கு மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தல் 2024 க்கு ராஜஸ்தானில் மூன்று இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட இருந்தது மற்றும் மூன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (பிப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். எந்த வேட்பாளரும் தனது பெயரை வாபஸ் பெறாததால், மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டுமில்லாமல், பாஜகவை சேர்ந்த சுன்னி லால் கராசியா மற்றும் மதன் ரத்தோட் ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்யசபா சீட் எண்ணிக்கை
ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்களான டாக்டர் மன்மோகன் சிங் (காங்கிரஸ்), பூபேந்திர சிங் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் கிரோரி லால் மீனா பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் காலியாக இருந்த ஒரு இடத்தில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் மாதம் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். ராஜஸ்தானில் 10 ராஜ்யசபா இடங்கள் உள்ளன. அதில் காங்கிரசுக்கு 6 எம்பிக்களும், பாஜகவுக்கு 4 எம்பிக்களும் உள்ளனர்.
மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு
மகாராஷ்டிராவில் கூட 6 ராஜ்யசபா தொகுதிகளில் எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த 6 இடங்களுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் புதிய பெயர் எதுவும் வரவில்லை அல்லது யாரும் தங்கள் பெயரை திரும்பப் பெறவில்லை.
இந்நிலையில், இந்த 6 எம்.பி.க்களும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், பாரதீய ஜனதா கட்சியில் இருந்து 3 தலைவர்களும், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தலா ஒருவரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பாஜகவின் சார்பாக அசோக் சவான், மேதா குல்கர்னி, டாக்டர் அஜித் கோபச்சடே ஆகிய மூன்று பேரும், சிவசேனாவிலிருந்து மிலிந்த் தியோராவும், தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரபுல் படேலும், காங்கிரஸ் கட்சி சார்பாக சந்திரகாந்த் ஹண்டோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் படிக்க - பாஜகவுக்கு தமிழக மக்கள் மீண்டும் பூஜ்யத்தையே தருவார்கள்: எம்பி மாணிக்கம் தாகூர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ