ராஜதானி, சதாப்தி ரயில் லேட்டா? அப்போ எஸ்எம்எஸ் வரும்

Last Updated : Nov 5, 2017, 10:21 AM IST
ராஜதானி, சதாப்தி ரயில் லேட்டா? அப்போ எஸ்எம்எஸ் வரும் title=

ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இதுகுறித்த தகவலை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் குறித்த விவரங்கள் ஏற்கெனவே எஸ்எம்எஸ்-சாக அனுப்பப்படுகிறது. 

இந்நிலையில் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ரயில் காலதாமதமானால் அந்த விவரத்தை எஸ்எம்எஸ்சாக அனுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Trending News