நீதிமன்ற வளாகங்களில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லா நாட்டை நோக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு இணங்க, நீதிமன்ற வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் தயாரிப்புகளை தடை செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முழு நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

Last Updated : Sep 29, 2019, 08:35 PM IST
நீதிமன்ற வளாகங்களில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. title=

ஜெய்ப்பூர்: ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லா நாட்டை நோக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு இணங்க, நீதிமன்ற வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் தயாரிப்புகளை தடை செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முழு நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில்., தேச தந்தை மகாத்மா காந்தியின் மரியாதைக்குரிய அடையாளமாக ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையையில்., முன்னாதக கடந்த 2010-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்திருந்தது, என்றபோதிலும் அது போதுமான அளவு வேலை செய்யவில்லை.

இதனிடையே அக்டோபர் 2-ஆம் நாள் முதல் நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது, ஆனால் பொது விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு இல்லாமல், இந்த நடவடிக்கை பயனற்றதாக இருக்கலாம். 

எனவே, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் அவரது மரியாதைக்குரிய அடையாளமாகவும், நிறுவனம் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகவும், தடைசெய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் / தெர்மோகோலை எந்தவொரு பொருளிலும் பயன்படுத்த வேண்டாம் என்று முழு நீதிமன்றமும் ஒருமனதாக தீர்மானித்துள்ளது. ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற விருந்தினர் மாளிகை வளாகத்திலும், அனைத்து துணை நீதிமன்றங்களின் வளாகங்களிலும், மாநிலத்தின் அனைத்து நீதிமன்றங்களின் வளாகத்திலும் உள்ள கேண்டீன்கள் / உணவகங்களிலும், உத்தியோகபூர்வ செயல்பாடுகளிலும் ஒற்றி பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிப்பதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தடை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரில் உள்ள உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகை, நீதிமன்ற வளாகங்களுக்குள் செயல்படும் கேன்டீன்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் வேறு எந்த சந்தர்ப்பங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றவும், இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முழு நீதிமன்றமும் ஒரு தீர்மானத்தின் மூலம் அதன் வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News