ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று இரவு வெளியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2018, 02:46 PM IST
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் title=

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேற்று (வியாழக்கிழமை) இரவு 152 வேட்பாளர்கள் கொண்ட தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டிலை கட்சியின் மத்திய தேர்தல் கமிஷன் பொதுச் செயலாளர் முகூல் வாஸ்னிக் வெளியிட்டார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட்டை சர்தர்பூரா தொதியிலும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் எம்.பீ. ஹரீஷ் மீனா கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அவர் டீயோலி யூனியாரில் போட்டியிடுகிறார்.

 

200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தானில் அடுத்த மாதம் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக கட்சி 200 தொகுதிகளில் 163 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. 

கடந்த புதன்கிழமை பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 31 சட்டமன்ற தொகுதிகளுக்கான இரண்டாவது  வேட்பாளர்களின் பட்டியல் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News