27 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய (EU) தூதுக்குழு செவ்வாய்க்கிழமை காஷ்மீருக்கு சென்றுள்ளதில் சூழ்ச்சமம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் பலர் இந்த நிகழ்வினை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும்., ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் காஷ்மீருக்கு வருகை தருவது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்காக 28 உறுப்பினர்கள் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளது. உள்நாட்டு எம்.பி-க்கள் யாரும் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவிகையில்., "ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் வரவேற்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்பட்டு நுழைவு வாயிலில் மறுக்கப்படுகிறார்கள். அதில் ஏதோ தவறு இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக., ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு திரும்ப பெற்ற பின்னர், மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் மத்திய அரசு பிரித்தது. இதனைத்தொடர்ந்து காஷ்மீர் மக்கள் நிலை குறித்து அறிய காஷ்மீருக்கு சென்ற ராகுல் தலைமையிலான தூதுக்குழு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு டெல்லிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
MPs from Europe are welcome to go on a guided tour of Jammu & #Kashmir while Indian MPs are banned & denied entry.
There is something very wrong with that.https://t.co/rz0jffrMhJ
— Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2019
மறுபுறம், பிரியங்கா, காஷ்மீருக்கு வருகை தரும் தூதுக்குழுவை அழைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை "தனித்துவமான தேசியவாதம்" என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தலைவர்களையும் விமான நிலையத்திலிருந்தே திரும்பும் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீரில் பயணிக்கவும் தலையிடவும் அனுமதிக்கிறது. இது போன்றது தனித்துவமான தேசியவாதம்." என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து PDP தலைவரும் ஜம்மு காஜ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முக்தி தெரிவிக்கையில்., "ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கு காஷ்மீரின் உள் நுழைய அனுமதி கிடைக்கும் எனில், ஏன் ராகுல் காந்திக்கு கிடைக்க கூடாது?" என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.,, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வருகை குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.