தீவிரவாதிக்கு மரியாதை கொடுத்த ராகுல்காந்தி; பயங்கரவாதிகளை நேசிக்கிறார்: BJP

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதி மசூத் அஸாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதையாக அழைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது!!

Last Updated : Mar 12, 2019, 08:32 AM IST
தீவிரவாதிக்கு மரியாதை கொடுத்த ராகுல்காந்தி; பயங்கரவாதிகளை நேசிக்கிறார்: BJP title=

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதி மசூத் அஸாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதையாக அழைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது!!

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷி முகமமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் தான் காரணம் என்று இந்திய அரசு ஒருசில ஆதாரங்களுடன் கூறி வருகிறது. 40 பலியாக காரணமாக இருந்த இந்த தீவிரவாதியை ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது கூட மரியாதை தருவதில்லை. அந்த அளவுக்கு இந்த நபர் மீது ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், தற்போது பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல்தான், தீவிரவாதி மசூத் அஸாரை அப்போது காந்தகாருக்கு பத்திரமாக அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார். அப்போது, மசூத் அஸாரை மரியாதையாக அழைக்கும் விதமாக ஜி என்று ராகுல் குறிப்பிட்டார்.

இதையடுத்து தீவிரவாதிகளையும், பாகிஸ்தானையும் ராகுல் விரும்புகிறாரா என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரை போலவே இன்னும் ஒருசில அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், ஒசாமா பின்லேடனை 'ஒசாமாஜி' என்று அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News