புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள புதிய தகவல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Last Updated : May 30, 2019, 12:33 PM IST
புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் title=

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள், உத்திர பிரதேசம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள் என பல மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அதற்க்கான கடிதத்தை கட்சியின் மேலிடத்தில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்ததாக ஊடங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளியான தகவல் உண்மை இல்லை என காங்கிரஸின் தகவல் தொடர்பு அலுவலர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா விளக்கம் அளித்தார். 

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 4 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending News