பிரதமர் மோடி திருடன்! மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

பிரதமர் மோடியை திருடன் என கூறிய ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு பிறகு மன்னிப்பு கோரினார்.

Last Updated : Apr 30, 2019, 05:45 PM IST
பிரதமர் மோடி திருடன்! மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி! title=

பிரதமர் மோடியை திருடன் என கூறிய ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு பிறகு மன்னிப்பு கோரினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்றார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 

நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்சநீதிமன்றம்  ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என  பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி தனதுபேச்சுக்கு உரிய விளக்கத்தை  அளிக்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ரபேல்  விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக  பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என சுப்ரீம் கோர்ட்  கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்  கண்டித்து உள்ளது. ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். எல்லோரும் தவறு செய்வார்கள் அதை ஒப்புகொள்ள வேண்டும் என கூறி உள்ளது. சுப்ரீம் கோர்ட் கண்டித்த நிலையில் ராகுல் காந்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். 

Trending News