'உங்களுக்கு நாங்க பொண்ணு தரோம்' - தமிழ் பெண்களிடம் வெட்கப்பட்ட ராகுல் காந்தி...

ராகுல் காந்தி நடைபயணத்தின்போது கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் , அவருக்கு தங்கள் வீட்டை பெண்ணை திருமணம் செய்துவைக்க தயாராக இருப்பதாக பெண் ஒருவர் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2022, 03:42 PM IST
  • ராகுல் காந்தி தனது 5ஆவது நாள் பயணத்தை இன்று மேற்கொண்டு வருகிறார்.
  • தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் தனது பயணத்தை தொடங்கினார்.
  • பெரியார் மண்ணை விட்டு பிரிய வருத்தமாக உள்ளது - ராகுல்
'உங்களுக்கு நாங்க பொண்ணு தரோம்' - தமிழ் பெண்களிடம் வெட்கப்பட்ட ராகுல் காந்தி... title=

'பாரத் ஜோடா யாத்ரா' (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நேற்றைய 4ஆவது நாள் பயண முடிவில் ராகுல் காந்தி, தமிழ்நாடு-கேரள எல்லையான தளச்சான் விளை சென்றடைந்தார். இதையடுத்து, இன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தனது 5ஆவது நாள் நடைபயணத்தை தொடர்கிறார். 

மேலும் படிக்க | மோடியை புகழ்ந்து நேருவை தாக்கிய யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், நேற்று முன்தின (செப். 10) நடைபயணத்தின் போது, ராகுல் காந்திக்கு ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, ராகுல் காந்தி நடைபயணத்தில் உடனிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் நேற்று (செப். 10) ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "ராகுல் காந்தி கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் பகுதியில், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுடன் உரையாடினார். அப்போது, அங்கிருந்த ஒரு பெண்மணி, 'தமிழ்நாட்டை நீங்கள் (ராகுல்) எந்தளவிற்கு நேசிக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, எங்கள் வீட்டு தமிழ் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்துவைக்க தயாராக உள்ளோம்' என கூறினார். இதை கேட்ட ராகுல், ஆச்சரியத்தில் மூழ்க்கினார்" என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ராகுல் காந்தி நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் பேசும் புகைப்படத்தையும், புல்தரையில் ராகுல் மகிழ்வாக ஓய்வெடுக்கும் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

முன்னதாக, ராகுல் காந்தி தனது நான்காவது பயணத்தை நிறைவுற்றபோது,"இந்த பயணத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தியா சாதி, மத, மொழி அடிப்படையில் பிளவுப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பாஜக நன்மை செய்கிறது. அது ஊடகங்களை கையில் எடுத்து பயன்படுத்தி வருகிறது.இதற்கு முற்று புள்ளி வைக்கவே இந்த பயணம். பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | திருமண விவகாரத்துக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த சிம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News