சண்டிகர்: பஞ்சாப் காங்கிரசில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, அம்பிகா சோனியை அம்மாநில முதல்வராக தேர்வு செய்தார். இருப்பினும், பஞ்சாபின் முதல்வராக சீக்கியர் ஒருவரே இருக்க வேண்டும் என்று கூறி அம்பிகா சோனி பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே, இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ப
முதல்வர் ஆவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ள பெயர்கள்
நேற்றிரவு ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், அம்பிகா சோனி பஞ்சாப் அரசியலுக்கு வர விருப்பமில்லை என மறுத்துவிட்டார். பஞ்சாபின் புதிய முதல்வர் யார் என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. முதல்வர் பதவிக்கான போட்டியில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜகார் மற்றும் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
ALSO READ | நான் அவமானமாக உணர்கிறேன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் சோகம்
ராஜினாமா செய்த பிறகு கேப்டன் வழங்கிய செய்தி
பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர், 'நான் அவமானப்படுத்தப்பட்டேன். சட்டமன்ற கட்சி கூட்டம் எனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை’ என தெரிவித்தார்.
நான் சித்துவை எதிர்ப்பேன் - கேப்டன்
ராஜினாமா செய்த பிறகு, கேப்டன் அமரீந்தர் சிங், நவஜோத் சிங் சித்து குறித்து குறிப்பிடுகையில், பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் சித்து, தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்றார். பாகிஸ்தானிற்கு ஆதரவாக தாய் நாட்டிற்கு எதிராக செயல்படும் சித்து பஞ்சாபிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் என்ரார். “இம்ரான் கானும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பாஜ்வாவும் சித்துவின் நண்பர்கள். பாகிஸ்தானிலிருந்து தினமும் ட்ரோன்கள் மற்றும் கையெறி குண்டுகள் வருகின்றன. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சித்துவை முதல்வராக்கினால் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன்” என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR