கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கேரளாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து இன்று கோவில் நடை திறப்பதையொட்டி, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர். அதுபடியே இன்று நிலக்கல் பகுதியில் வரும் பெண்களை ஐயப்ப பெண் பக்தர்கள் நிறுத்துவதாகவும் தகவல் வெளியானது. இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தி வருகின்றனர்.
அதேபோல கேரள மாநிலம் ஆலபுழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற 45 வயது பெண் பத்தனம் திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவர் பாதுகாப்புக்காக அப்பெண் பத்தனம்திட்டா காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்நிலையில், செய்தி சேகரிக்க சென்ற இளம் வயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பத்திரிக்கையாளர்கள் சென்ற கார் அடுத்து நொறுக்கப்பட்டது. காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு பத்திரிக்கையாளர் சரிதாவை(நியூஸ் மினிட்) தாக்கி உள்ளனர்.
மற்றொரு பத்திரிக்கையாளர்கள் பூஜாவின் (ரிபப்ளிக் நியூஸ்) கார் மோசமான முறையில் தாகி உள்ளனர். உடன் இருந்த கேமராமேன் மற்றும் உதவியாளர்களும் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் சபரிமலைக்கு அருகில் நிலக்கல் பகுதியில் நடந்துள்ளது. மேலும் போராட்டக்கர்கள் மோசமான வாரத்தையில் பெண் பத்திரிக்கையாளர்கள் திட்டியுள்ளனர்.
நிலக்கல் போலீசார் இதுக்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளன பத்திரிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளனர்.