இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து!

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 

Last Updated : Jul 31, 2018, 10:41 AM IST
இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து!  title=

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானின் பொது தேர்தல் கடந்த ஜூலை 25-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

ஆட்சியை அமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு 21 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் சிறிய கட்சிகளுடனும், சுயேச்சை உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக பிடிஐ கட்சி தெரிவித்தது.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், பாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு முன்னர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பார் என பிடிஐ கட்சி ஏற்கெனவே அறிவித்து இருந்த்து. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக, பெருன்பான்மை பலத்துடன் தான் பதவியேற்க உள்ளதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று நம்பிக்கை கொள்வதாக குறிப்பிட்டார். இருதரப்பு உறவில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினார்.

 

Trending News