பாஜக, திமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். ஜன் சூராஜ் அபியான் என்ற கட்சியை அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியின் 155 வது பிறந்தநாள் அன்று அறிமுகப்படுத்த உள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் பிரசாந்த் கிஷோர். மேலும் தனது கட்சியின் பொதுக்கூட்டம், தலைவர்கள் ஆகியோரையும் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த கூட்டங்களில் கட்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான திட்டங்கள், தலைமை நிர்வாகிகள், கட்சியின் கொள்கை உள்ளிட்ட அனைத்து முக்கிய விஷயங்களும் தீர்மானிக்கப்பட உள்ளன. மேலும் சில விவரங்களை பிரசாந்த் கிஷோரின் அமைப்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!
ஜான் சூராஜ் பிரச்சார குழு உறுப்பினர்களுக்கு இடையே நடந்த சந்திப்பின் போது பிரசாந்த் கிஷோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜன் சூராஜ் அபியான் கட்சியாக மாறியதும் 1 கோடி பேர் கட்சியில் இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஜாதிகளால் பிளவுபட்டுள்ள பீகாரை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது முதல் பாணி என்றும் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தனது முயற்சிகள் பலனை தரத் தொடங்கியுள்ளது என்றும், மக்களிடம் இது குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பீகாருக்கு புதிய திட்டங்களை கொண்டு வரவும், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
Prashant Kishore in party formation exercise . @PrashantKishor party will be launched on Oct 2. pic.twitter.com/DbtyvSCafU
— Kamalika Sengupta (@KamalikaSengupt) July 29, 2024
"நாங்கள் பீகாரின் தலையெழுத்தை மாற்றும் நோக்கத்துடன் வந்துள்ளோம். 20 முதல் 25 இடங்களை வெல்வதற்கு மட்டும் நாங்கள் வரவில்லை. இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்து பாருங்கள். அப்போது தெரியும் நாங்கள் யார் என்று" என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "ஐந்து பெரிய சமூகங்கள் இங்கு உள்ளன. பொதுப் பிரிவு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் உள்ளனர். இதில் தலித்துகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதால் புதிய கட்சியின் முதல் தலைவர் இந்தப் பிரிவில் இருந்து தேர்வு செய்யப்படுவார். எங்கள் கட்சியில் சுழற்சி முறை பிரதிநிதித்துவம் வழங்க முடிவு செய்துள்ளோம், அவர்களது பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும். பொதுப்பிரிவில் உள்ள ஒருவர் அல்லது முஸ்லீம் சமூகத்தில் இருந்து ஒருவர் எங்களது இரண்டாவது தலைவராக இருப்பார். அதை தொடர்ந்து மற்ற சமூகத்தில் இருந்து ஒவ்வொருவருக்கும் பதவிகள் வழங்கப்படும். அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே இதன் யோசனை’’ என்றார்.
மேலும் படிக்க | நிதி ஆயோக் கூட்டம்: 7 மாநில முதல்வர்களைத் தொடர்ந்து மம்தாவும் புறக்கணிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ