ரம்ஜான் திருநாள்: இஸ்லாமியர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்!  

Last Updated : Jun 15, 2018, 12:36 PM IST
ரம்ஜான் திருநாள்: இஸ்லாமியர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து! title=

ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்!

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜான் தினம் இன்று என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிறை தெரியவில்லை எனக் கூறி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவில்லை. 

இதையடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறை தெரிந்ததாக ஹாஜி அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்திலும் சில பகுதியில் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர். 

இந்தநிலையில், ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது,,!

ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள், இந்த ரம்ஜான் பெருநாளில் உலகில் அன்பும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று கூறியுள்ளார். 

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,,,! தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரமலான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது,,,,! 

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே, என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Trending News