மும்பை: PNB மோசடி வழக்கு தொடர்பாக மும்பை சிறப்பு PMLA நீதிமன்றம், நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி-க்கு Non-Bailable பிடிவாரண்ட் பிரப்பித்துள்ளது!
பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டுவரும் நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி அகியோர் இருவருக்கும் மும்பை சிறப்பு PMLA நீதிமன்றம் Non-Bailable பிடிவாரண்ட் பிரப்பித்துள்ளது.
Special PMLA court in Mumbai issues non bailable warrant against #NiravModi and #MehulChoksi in connection with #PNBFraudCase.
— ANI (@ANI) March 3, 2018
#PNBFraudCase: CBI produces 6 accused before Special CBI court seeking police custody for Gokulanath Shetty and judicial custody for the other 5. #Mumbai
— ANI (@ANI) March 3, 2018
PNB fraud...
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள தகவலின் படி ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது குறிப்பிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.
இந்த ஊழல் தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான 5,100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சம்பந்தப்பட்ட நிரவ் மோடி தலைமறைவாகி விட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.
இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தான் பெற்ற கடன் ரூ.5000 கோடிதான் எனவும் அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக அனைத்து வழிகளையும் வங்கி நிர்வாகம் முடக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த அவசர முடிவினால் நிறுவனத்தின் பெயரும் கெட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு, இதனால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து, கடந்த பிப், 27 ஆம் நாள் நிரவ் மோடி கூடுதலாக ரூ.1323 கோடி ஊழல் செய்துள்ளதாகவும், வரும் மார்ச் 12-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக வேண்டும் எனவும், தவரும் பட்சத்தில் அவருக்கு Non-Bailable பிடிவாரண்ட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திலையில் தற்போது நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி அகியோர் இருவருக்கும் மும்பை சிறப்பு PMLA நீதிமன்றம் Non-Bailable பிடிவாரண்ட் பிரப்பித்துள்ளது.