மோடியின் 3 ஆண்டு ஆட்சி விழா பாஜக கொண்டாட்டம்!

Last Updated : May 26, 2017, 10:17 AM IST
மோடியின் 3 ஆண்டு ஆட்சி விழா பாஜக கொண்டாட்டம்! title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாஜக அரசின்,3 ஆண்டு நிறைவை 20 நாட்கள் விழாவாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

இன்றுடன் அசாமிலும் பாஜக அரசு பதவியேற்று ஒரு வரிடம் நிறைவடைகிறது. இதனால் இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் கொண்டாடும் விதமாக நாட்டின் மிக நீளமான பாலத்தை அசாமில் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 

இந்த் விழாவில் பாஜக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாலம் திறப்பு விழாவிற்கு பிறகு, கட்சி சார்பில் 5 விழாக்களில் மோடி கலந்து கொள்ள உள்ளார். மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான விழாக்கள் இன்று துவங்கி, ஜூலை 15 வரை நாடு முழுவதிலும் உள்ள 900 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 

மேலும் நேற்று பேசிய கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, 3 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். 70 ஆண்டுகளாக மற்ற அரசுகள் செய்யாததை இந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Trending News