மாயாவதியின் பதவி தாகத்திற்கு உருவானது SP-BSP கூட்டணி... -மோடி!

உத்திர பிரதேச மாநிலத்தில் உருவாகியுள்ள SP-BSP கூட்டணி, மாயாவதியின் பதவி தாகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என பிரதமர் மோடி சாடியுள்ளார்!

Last Updated : Apr 27, 2019, 08:40 PM IST
மாயாவதியின் பதவி தாகத்திற்கு உருவானது SP-BSP கூட்டணி... -மோடி! title=

உத்திர பிரதேச மாநிலத்தில் உருவாகியுள்ள SP-BSP கூட்டணி, மாயாவதியின் பதவி தாகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என பிரதமர் மோடி சாடியுள்ளார்!

மக்களவை தேர்தல் நான்கம் கட்ட வாக்குப்பதிற்கான பிரச்சாரம் இன்றோது ஓயும் நிலையில் உத்திர பிரதேச மாநிலம் கன்னூஜ் தொகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக-விற்கு எதிராக உருவாகியுள்ள SP-BSP கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

மேலும் எதிர்கட்சியினரால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி பலமில்லா ஒரு அரசை அமைக்க விரும்பு கூட்டணி, ஊழலை விரும்பு ஒரு கூட்டணி என குற்றம்சாட்டினார். எதிர்கட்சியினர் எவ்வளவு தான் பிரச்சாரம் மேற்கொண்டாலும் இருதியில் அவர்களுக்கு கிடைக்கப்போவது தோல்வி தான், மக்கள் எப்போது மோடி சர்காரையே விரும்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சிகள் அனைவரும் பால்காட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து ஆதாரம் கோரி வருபவர்கள். நாட்டை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் குறித்து சந்தேக கேள்விகளை முன்வைத்து வருபவர்கள்.

தொடர்ந்து பேசி மோடி தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர் எனவும், தன்னை சாதிய அரசியலில் இழுத்துவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் அடையாளமாக மாற்றிவிட வேண்டாம் எனவும், தான் 130 கோடி மக்களின் குடும்பத்தை சேர்ந்தவன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய மோடி., நாட்டின் மிக பழமையான கட்சி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டது எனவும் விமர்சித்தார். நடைபெறும் மக்களவை தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வரும் நாளில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போய்விடும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்து 180 டிகிரி கோனம் மாற்றம் கொண்டு பாஜக ஆட்சியில்., கடந்த 5 ஆண்டுகளில் வரி அதிகரிக்க வில்லை என்றாலும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் மோடி தெரிவித்துள்ளார். 

இந்த பிரமாண்ட கூட்டத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஃம் விலாஸ் பவன், பியூஸ் கோயல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் பங்கேற்றனர். தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் துணை சபா நாயகர் தம்பி துறை ஆகியோரும் இடம்பெற்றனர்.

Trending News