தேர்தலுக்கு தயாராக உள்ளோம், எங்கள் பணிகள் எங்களுக்காக பேசும்: பிரதமர் மோடி உற்சாக ட்வீட்

Lok Sabha Election 2024: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளின் தயார்நிலையை வலியுறுத்தினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2024, 05:43 PM IST
  • தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • அதற்கு முன் புதிய அவையை அமைக்க வேண்டும்.
  • தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில், அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தலுக்கு தயாராக உள்ளோம், எங்கள் பணிகள் எங்களுக்காக பேசும்: பிரதமர் மோடி உற்சாக ட்வீட் title=

Lok Sabha Election 2024: இந்திய மக்களும், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் காத்துக்கொண்டு இருந்த அறிவிப்பு இன்று வந்துவிட்டது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான முழுமையான அட்டவணையை தேர்தல் ஆணையம் (Election Commission) சற்று முன் வெளியிட்டது. ஏற்கனவே துவங்கியுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் இனி சூடு பிடிக்கத் துவங்கும். தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தவுடன், இது குறித்து தனது எக்ஸ் கணக்கில் கருத்தை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தனது நம்பிக்கையையும் தயார் நிலையையும் வெளிப்படுத்தினார். தேர்தல்களை "ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா" என்று அவர் குறிப்பிட்டார். 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வெளியிட்ட அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளின் தயார்நிலையை வலியுறுத்தினார். "நாங்கள், பாஜக-என்டிஏ, தேர்தலுக்கு முழுமையாக தயாராக இருக்கிறோம்," என்று அவர் உறுதிப்படுத்தினார். பல்வேறு துறைகளில் தங்கள் அரசாங்கம் வழங்கியுள்ள சேவைகள் மற்றும் செய்துள்ள சாதனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கள் தேர்தல் பிரச்சார உத்தியை பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டினார். "நல்ல நிர்வாகத்திற்கான எங்கள் சாதனைகள் மற்றும் பல்வேறு தூறைகளில் நாங்கள் வழங்கியுள்ள சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்போம்" என்று அவர் தனது X பதிவில் கூறியுள்ளார். 

வரவிருக்கும் தேர்தலுக்கு கட்சிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், ஆளும் கட்சி இந்த தேர்தலுக்காக கோண்டுள்ள நேர்மறையான, உறுதியான அணுகுமுறையை பிரதமரின் பதிவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

மக்களவைத் தேர்தலுக்கான (Lok Sabha Election) தேர்தல் தேதியை சற்று முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்து சிறிது நேரத்திலேயே பிரதமரின் ட்வீட் வந்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Rajeev Kumar) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும். பல்வேறு தேர்தல் விதிமுறைகள் பற்றியும் தேர்தல் ஆணையர் விரிவாக விவரித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் 2024: முழு அட்டவணை
- முதல் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 19 ஆம் தேதி
- இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 26 ஆம் தேதி
- மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: மே 7 ஆம் தேதி 
- நான்காம் கட்ட வாக்குப்பதிவு: மே 13 ஆம் தேதி
- ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: மே 20 ஆம் தேதி
- ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மே 25 ஆம் தேதி
- ஏழாம் கட்ட வாக்குப்பதிவு: ஜூன் 1 ஆம் தேதி

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அவையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில், அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News