ஆப்கானிஸ்தானின் அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி:-

Last Updated : Jun 4, 2016, 03:40 PM IST
ஆப்கானிஸ்தானின் அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி:- title=

ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். தனது முதல் பயணமாக ஆப்கானிஸ்தான் செல்கிறார். ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமர் அங்கு அந்நாட்டின் பிரதமர் அஷ்ரப் கனியை சந்தித்து பேசினார்.  பிறகு ஹெராத் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார். இந்த அணை இந்தியாவின் உதவியால் புதுப்பிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி பேசுகையில்:- இந்த அணை செங்கற்களாலும், மணலாலும் கட்டப்பட்டது அல்ல. இந்தியா ஆப்கானிஸ்தானின் நட்புறவை கலந்து கட்டப்பட்டது என்றும். ஆப்கானிஸ்தானின்  வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது. இஸ்லாம் மக்களுக்கு எனது ரம்ஜான் வாழ்த்துகள் என்றும் கூறினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பேசுகையில்:-  ஆப்கானிஸ்தானின் நீண்ட நாள் கனவு. இந்த கனவு 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிறைவேறியுள்ளது என்று கூறினார்.

Trending News