பூட்டானில் ரூபே கார்டை அறிமுகபடுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி பூட்டானில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினார், திம்புவை 'முக்கிய பங்குதாரர்' என்று அழைக்கிறார்!!

Last Updated : Aug 17, 2019, 10:06 PM IST
பூட்டானில் ரூபே கார்டை அறிமுகபடுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி! title=

பிரதமர் நரேந்திர மோடி பூட்டானில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினார், திம்புவை 'முக்கிய பங்குதாரர்' என்று அழைக்கிறார்!!

பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று பூட்டான் சென்றார். சிம்தோகா த்சோங்கில் வாங்குவதன் மூலம் ரூபே அட்டையை மோடி அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்; '' இன்று நாங்கள் பூட்டானில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பூட்டானின் வளர்ச்சியில் நாங்கள் ஒரு முக்கிய பங்காளியாக இருப்பது நமது பாக்கியம். பூடானின் ஐந்தாண்டு திட்டத்தில், இந்தியாவின் பங்களிப்பு தொடரும்'' என்று பிரதமர் கூறினார்.

இதையடுத்து, பிரதம மந்திரி சிம்தோகா த்சோங்கில் ஒரு சைப்ரஸ் மரம் மரக்கன்றுகளையும் நட்டார். மேலும் அவர் பேசுகையில், பூடான் போன்ற அண்டை நாடுகளுடனான நட்பை எந்த நாடு வேண்டாம் என சொல்லாது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் பூடான் சிறப்பிடம் பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பூடான் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. 

பூடான் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியையும் இந்தியா செய்யும். நீர்மின் திட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பூடான் பிரதமர் லோடாய் ஷெரீங் கூறுகையில், 2014ம் ஆண்டு, முதல்முறையாக , மோடி பூடான் வந்த போது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லை திறந்து விடப்பட்டதாலும், நமக்கு திறந்த இதயம் உள்ளதாலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும் என அவரிடம் கூறினேன். அளவில், இந்தியாவும், பூடானும் வேறுபடலாம். ஆனால், நம்பிக்கை, லட்சியம் ஆகியவை ஒன்றாக உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

 

Trending News