Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார்.
அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு வந்தார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார்.
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi carries the mortal remains of his late mother Heeraben Modi who passed away at the age of 100, today. pic.twitter.com/CWcHm2C6xQ
— ANI (@ANI) December 30, 2022
தொடர்ந்து, பிரதமர் தாயாரின் உடல் இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்து
உடலை கொண்டு வாகனம் வரை, தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் தூக்கி சென்றார். பின்னர் உடல் ஊர்தியில் வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியும் ஊர்தி தாயாரின் உடலுடன் சென்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
#WATCH | Gujarat: Heeraben Modi, mother of PM Modi, laid to rest in Gandhinagar. She passed away at the age of 100, today.
(Source: DD) pic.twitter.com/wqjixwB9o7
— ANI (@ANI) December 30, 2022
மேலும் படிக்க | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது தாயாரை மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டே நாள்களில் பிரதமரின் தாயார் உயிரிழந்துள்ளார்.
#WATCH | Mortal remains of Heeraben Modi, mother of PM Modi, brought to a crematorium for last rites in Gandhinagar. pic.twitter.com/Nq5Ddw9hTi
— ANI (@ANI) December 30, 2022
100 வயதான ஹீராபென் மோடி, பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ