குந்தி: சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஜார்க்கண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக, இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் சென்றுள்ளார். குந்தி மற்றும் ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
முதலாவதாக, பிரதமர் மோடி குந்தியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர், இங்கு தாமரைக்கான தலைமை இருக்கும் இடத்தில் ஒருபோதும் அது வாடிவிட முடியாது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். அதே நேரத்தில், பீகார், ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய பிர்சா முண்டாவுக்கு வணக்கம் செலுத்தினார். சில நாட்களுக்கு முன்பு நாடு பிர்சா முண்டாவின் பிறந்த நாளை கொண்டாடியது, இன்று நான் அவர்களின் நிலத்திற்கு வந்துள்ளேன். அவரை மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் எனக் குறிப்பிட்டார்.
ஜார்கண்ட் மக்களுக்கு பாஜக அரசு மீதும், தாமரை மீதும் நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்றால், அது பாஜக-வால் மட்டுமே அதை செய்ய முடியும் எனவும் கூறினார்.
பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இங்குள்ள மக்கள் மீண்டும் "ஜார்க்கண்ட்" மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் கூறுகிறார்கள். ஜார்கண்டின் வளர்ச்சிக்கு பாஜக திரும்புவது அவசியம் எனவும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
முதல் கட்ட வாக்குப்பதிவில் இருந்து மூன்று விஷயங்கள் தெளிவாக உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார். முதலாவது, ஜனநாயகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஜார்க்கண்ட் மக்களின் நம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும்.
இரண்டாவதாக, பிஜேபி அரசாங்கம் நக்சலைட்டின் முதுகெலும்பை உடைத்ததால், மாநிலத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் நக்சலைட்டின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. மூன்றாவதாக, பாஜக அரசு மீது ஜார்க்கண்ட் மக்களுக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.
370 வது பிரிவு பற்றி பேசிய பிரதமர், 370 வது பிரிவு இப்போது ஜம்மு-காஷ்மீரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பு பழங்குடி பிராந்தியத்தில் உள்ளது.
அயோத்தி குறித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் அதன் நட்பு கட்சிகளின் மூலம் சர்ச்சையாக்கப்பட்ட ராம் ஜன்மபூமி தொடர்பான விவகாரம் அமைதியாக தீர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதே நேரத்தில், பாஜகவின் மத்திய அரசும், இங்குள்ள மாநில பாஜக அரசும், கிராமம் மற்றும் பழங்குடிப் பகுதிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணிகளைச் செய்துள்ளன என்றார். பல சகோதரிகள் இங்கு உள்ளனர். அவர்கள் சாகி மண்டலுடன் தொடர்புடையவர்கள் அல்லது முத்ரா திட்டத்தின் கீழ் தங்கள் தொழிலை நடத்துவதற்கு உதவியுள்ளனர் எனவும் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி முடிந்துள்ளது. முதல் கட்டமாக 13 சட்டமன்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், டிசம்பர் 12 ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும், டிசம்பர் 16 ஆம் தேதி நான்காம் கட்டமாகவும், டிசம்பர் 20 ஆம் தேதி ஐந்தாவது கட்டம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.