இந்தியாவின் "Warren Buffet" ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் Warren Buffet என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 11:20 AM IST
  • திரு. ஜுன்ஜுன்வாலா பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தார்.
  • அவர் தனது முதலீட்டு திறன்களுக்காக இந்தியாவின் "Warren Buffet" என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவின் "Warren Buffet" ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்! title=

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் Warren Buffet என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார். இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயரும் என கூறப்படுவதுண்டு. 

இந்திய பங்குச் சந்தையின் தந்தை என்று பிரபலமாக அறியப்பட்ட அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஆகாசா ஏர் நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கிய திரு. ஜுன்ஜுன்வாலா சில நாட்களுக்கு முன்பு அதன் தொடக்க விழாவில் தோன்றினார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

திரு. ஜுன்ஜுன்வாலா பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தார். அவர் தனது முதலீட்டு திறன்களுக்காக இந்தியாவின் "Warren Buffet" என்று அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | வீடுதோறும் மூவர்ண கொடி; செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

பிரதமர் மோடி ட்விட்டரில் திரு.ஜுன்ஜுன்வாலாவுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள் திரு. ஜுன்ஜுன்வாலாவின் மரணம் பேரிழப்பு எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | Independence Day: மூவர்ணக் கொடியில் ஜொலிக்கும் கோல்கொண்டா கோட்டை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News