சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம்: PM மோடி

இந்தியா - ரஷ்யா இடையிலான சாலை மற்றும் போக்குவரத்து பாதையில் ஒப்பந்தம். இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 4, 2019, 03:07 PM IST
சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம்: PM மோடி title=

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ரஷ்யா பயணத்தில் உள்ளார். பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரம் ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருநாட்டின் முக்கிய அதிகாரிகளும் இருந்தனர். இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் போக்குவரத்து பாதையில் ஒப்பந்தம். இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 

இதன்பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, இரு நாடுகளின் நட்பும் மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ஆயுத உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். ரஷ்யாவுடன் டஜன் கணக்கில் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபடுள்ளன. சென்னை மற்றும் விலாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும். நாங்கள் எங்கள் உறவுகளை பிராந்தியங்களை நோக்கி எடுத்துச் செல்கிறோம். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா மற்றும் ரஷ்யா விரும்புவது இல்லை என பிரதமர் மோடி உரையாற்றினார்.

விளாடிமிர் புடின் தனது உரையில், இரு நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் உள்ளனர். கடல் பாதை மேம்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது பிரிவு விரைவில் தொடங்கும். இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கடல் தொடர்பான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று புடின் கூறினார்.

Trending News