பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் - ஐ.நா. பொதுஅவையில் பிரதமர் பெருமிதம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறந்த ஜனநாயக பாரம்பரியம் எங்களிடம் உள்ளது. உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இருக்கும் எங்கள் நாடு (இந்தியா) இப்போது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 07:27 PM IST
  • பயங்கரவாதத்தை கையில் எடுப்பவர்கள், அவர்களுக்கே ஆபத்தாக முடியும்: மோடி
  • 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோய் உலகம் எதிர்கொண்டுள்ளது.
  • பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறந்த ஜனநாயக பாரம்பரியம் எங்களுடையது: மோடி
பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் - ஐ.நா. பொதுஅவையில் பிரதமர் பெருமிதம் title=

நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் QUAD மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகிறார் (PM Modi Address In UNGA). ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பிரதமர் மோடி, நான் "ஜனநாயகத்தின் தாய்" என்று அழைக்கப்படும் நாட்டில் வாழ்கிறேன். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் மோடி கூறினார்.

100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோய்:
UNGA -வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை வருடங்களாக, உலக நாடுகள் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்கொண்டுள்ளது. இதுபோன்ற கொடூரமான தொற்றுநோயால் தங்கள் உயிரை இழந்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதம் அவர்களுக்கே ஆபத்தாக முடியும்:
பயங்கரவாதத்தை கையில் எடுப்பவர்கள், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானின் மண்ணை பயங்கரவாதத்தை பரப்ப பயன்படுத்தக் கூடாது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என்று தனது உரையில் பிரதமர் மோடி வலியுறுத்திநார்.

 

இந்தியா ஆயிரம் ஆண்டுகால ஜனநாயக பாரம்பரியம்:
ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமை கொண்ட நாட்டை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறந்த ஜனநாயக பாரம்பரியம் எங்களிடம் உள்ளது. உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இருக்கும் எங்கள் நாடு (இந்தியா) இப்போது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. நமது பன்முகத்தன்மை தான் நமது வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். டஜன் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான பழக்க வழக்கம், கலாச்சாரம் கொண்ட நாடு. ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார்.

ஐ.நாபில் உரை உரையாற்றிய பிரதமர் மோடியின் விவரம்:
2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி 33 நிமிடங்கள் 45 வினாடிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். அதே நேரத்தில், 2015 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி 19 நிமிடங்கள் 13 வினாடிகள் உரை நிகழ்த்தினார். 2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 16 நிமிடங்கள் 38 வினாடிகள் உரையாற்றினார். 2020 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 21 நிமிட உரையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News