புதுடில்லி: கோவிட் -19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' தடுப்பூசியை உருவாக்கி, தொற்று பரவல் தொடங்கி ஒரு வருடத்திற்குள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பிற நடவடிக்கைகளை மேம்படுத்த அரும் பங்காற்றியுள்ள இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், முந்தைய நூற்றாண்டில் இந்தியாவின் அனுபவத்தை மேற்கோள் காட்டி, வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை பெற இந்தியா (India) பல ஆண்டுகளாக காத்திருந்ததாகக் கூறினார். ஆனால் தற்போது, இந்திய விஞ்ஞானிகள் இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கோவேக்ஸின் தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள மிக சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் ஆகும்.
"வேளாண்மை முதல் வானியல் வரை, பேரழிவு மேலாண்மை, பாதுகாப்பு தொழில்நுட்பம், தடுப்பூசி என, இந்தியா ஒவ்வொரு திசையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான எரிசக்தி துறைகளில் இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, ”என்று CSIR கூட்டத்தில் பிரதமர் கூறினார்.
இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய சவாலுடன் உலகம் போராடிக் கொண்டிருப்பதை பற்றி குறிப்பிட்டுள்ள பிரதமர், விஞ்ஞானிகளை பாராட்டினார். தொற்று பரவல் தொடங்கி ஒரு வருடத்திற்குள் தடுப்பூசிகள் (Corona Vaccine) கண்பிடிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை பிரதமர் என்று கூறினார்.
ALSO READ | பிரதமர் மோடியை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசினார் கமலா ஹாரிஸ்
இக்கூட்டத்தில், பிரதமர் மோடி "ஆத்மனிர்பர் பாரத்" (தற்சார்ப்பு இந்தியா) மற்றும் வலுவான இந்தியாவுக்கான அரசின் நடவடிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். கோவிட் -19 நெருக்கடி அதன் வேகத்தை குறைத்திருக்கலாம், ஆனால் அப்படியே இலக்கை நோக்கிய எங்கள் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வேளாண்மை முதல் வானியல் வரை, பேரழிவு மேலாண்மை, பாதுகாப்பு தொழில்நுட்பம், தடுப்பூசி மற்றும் பயோடெக்னாலஜி, பேட்டரி தொழில்நுட்பம் வரை பல துறைகளில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா இப்போது நீடித்த வளர்ச்சி மற்றும் சுற்றுசூழலை பாதிக்காத எரியாற்றலில் உலகிற்கு வழியைக் காட்டியாக திகழ்ந்து வருவதாகவும், மென்பொருள் மற்றும் செயற்கைக்கோள் வளர்ச்சியில்உலகில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
ALSO READ | எச்சரிக்கை! தடுப்பூசி SMS மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR