ஊழலுக்கு எதிராக போராடும் மக்கள் அனைவரும் காவலாளிதான் என்ற செய்தியுடன் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சமீபத்தில் ராகுல் காந்தி அடிக்கடி கூறிவரும் காவலாளி ஒரு திருடன் எனும் வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,
"உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள்.
நான் தனியாக இல்லை.
ஊழலுக்கும் எதிராகப் போராடும் அனைவரும் ஒரு காவலாளிதான்.
தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான்.
இன்று இந்தியர் ஒவ்வொரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
— Narendra Modi (@narendramodi) March 16, 2019