பிரதமர் நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே கருத்தியலை நம்புகிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் ‘அரசியலமைப்பைச் பாதுகாப்போம்’ என்னும் குடியுரிமை மற்றும் மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான பேரணி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். அப்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே கருத்தியலை நம்புகிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளனர்.
வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ராகுல் காந்தி குடியுரிமை மற்றும் மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தினார். “அரசியலமைப்பைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார். கல்பேட்டாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டரை கடந்து நடைபெற்றது.
இந்த பேரணி நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் கூறுகையில்... "நாதுராம் கோட்சே மற்றும் நரேந்திர மோடி இருவருமே ஒரே சித்தாந்தத்தை நம்புகிறார்கள். ஆனால் நரேந்திர மோடிக்கு கோட்சே மீது நம்பிக்கை இருப்பதாக பொதுவெளியில் சொல்ல தைரியம் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்டார். ஏனெனில் அவர் தன்னை நம்பவில்லை, அவர் யாரையும் நேசிக்கவில்லை, அவர் யாரைப்பற்றியும் கவலைபடவில்லை, அவர் யாரையும் நம்பவில்லை. நம் பிரதமரும் அதே மாதிரியானவர் தான். ஆனால், அவர் தன்னை மட்டுமே நேசிக்கிறார், தன்னை மட்டுமே நம்புகிறார்." என தெரிவித்தார்.
#WATCH Rahul Gandhi, Congress in Kalpetta, Kerala: Nathuram Godse shot Mahatma Gandhi because he did not believe in himself, he loved no one, he cared for nobody, he believed in nobody and that is the same with our Prime Minister, he only loves himself, only believes in himself. pic.twitter.com/itx4GKiVIM
— ANI (@ANI) January 30, 2020
Rahul Gandhi in Kalpetta: Notice that whenever you ask Narendra Modi about unemployment and jobs, he suddenly distracts attention. NRC and CAA are not going to get jobs, the situation in Kashmir and burning Assam are not going to get jobs for our youth. #Kerala pic.twitter.com/dN7QeMvBZo
— ANI (@ANI) January 30, 2020
மேலும், வேலையின்மை மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து நீங்கள் நரேந்திர மோடியிடம் கேட்கும்போதெல்லாம் அவர் திடீரென்று கவனத்தை திசை திருப்புகிறார் என்பதை கவனியுங்கள். நாம் அனைவரும் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ வேலை பெறப் போவதில்லை, காஷ்மீரின் நிலைமையில் இருந்தும் மற்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் அசாமிலும் எங்கள் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போவதில்லை என தெரிவித்து கடுமையாக தாக்கினார்.