RSS மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 9, 2020, 04:12 PM IST
RSS மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் title=

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரும், பாரதிய ஜன சங்கத்தின் முன்னாள் தலைவருமான பி.பரமேஸ்வரன் அதிகாலை காலமானார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஓட்டப்பாலத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் மறைந்த  முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருடன் இணைந்து பி.பரமேஸ்வரன் பணியாற்றியுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இவரின் சேவையைப் பாராட்டி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பத்ம ஸ்ரீ விருதும், 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி, இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தனர்.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி  ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

பாரதமாதாவின் பெருமைக்குரிய, அர்ப்பணிப்பு மிக்க மகன் பி. பரமேஸ்வரன். இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மறுமலர்ச்சிக்கும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பரமேஸ்வரன். பரமேஸ்வரின் தத்துவங்கள், சிந்தனைகள், எழுத்துகள் அற்புதமானவை.

தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களில் ஒருவர், பாரதிய விசாரா கேந்திரம், விவேகானந்தா கேந்திரம் உள்ளிட்ட பல அமைப்புகளை உருவாக்கி வளர்த்தவர். பல முறை அவருடன் உரையாடுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவரின் மறைவு வேதனையளிக்கிறது. ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Trending News