நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடக்கிறது. 22 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்கள் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று வருகை தந்த சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அப்போது பாராளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்த்து அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். சோனியா காந்தி பதில் கூறியதுடன், பதிலுக்கு பிரதமர் மோடியின் நலம் குறித்தும் புன்னகையுடன் விசாரித்தார்.
சோனியா காந்தி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.