காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று செயல்: பிரதமர் மோடி தாக்கு

வடகிழக்கு மாநிலங்களைக் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எப்பொழுதும் அக்கைறை இல்லை. இதுவரை எந்தவித வசதி செய்யப்படவில்லை, வளர்ச்சியும் ஏற்ப்படவில்லை என கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2019, 01:53 PM IST
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று செயல்: பிரதமர் மோடி தாக்கு title=

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல்கள் முடிந்தவுடன் வரும் மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

அந்தவகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலத்திற்க்கான சட்டப்பேரவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(புதன்கிழமை) அருணாச்சல பிரதேசத்தில் பசிகாட் பகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது, 

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் மாநிலத்தின் கிராமங்களில் ஒளி இருக்கிறதா?  இல்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் கிராமங்களில் மின்சாரம் கொண்டுவந்தோம். சாலைவசதி, போக்குவரத்து, ரயில் போக்குவரத்து வசதி ஏற்ப்படுத்தி கொடுத்தோம். 

உங்கள் அன்பின் விளைவாக தான் பிரதமர் மோடி இங்கு வந்து பேசுகிறேன். அந்த அன்பினால் தான் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளதை பார்க்கிறேன். உங்கள் அன்பும், உங்கள் நம்பிக்கையும் தான் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்த வைத்தது. 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று செயல். அதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பொய்கள். இது தேர்தல் அறிக்கை அல்ல... உங்களை ஏமாற்ற காங்கிரஸ் ஆடும் நாடகம். அவர்களின் தேர்தல் அறிக்கையால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப்படும்.

நமது கொடியை எரிக்கக் கூடியவர்கள், நாட்டை பிளவுப்படுத்தும் கோஷங்கள் போடுபவர்களுக்கு, வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்துக்கொண்டு நாட்டுக்கு எதிராக சதி திட்டம் செய்பவர்கள், பாபா சாகேப் அம்பேத்கர் சிலைகளை உடைப்பவர்களுக்க ஆதராவாக தான் காங்கிரஸ் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ அகற்ற விரும்புகிறது எனவும் கூறினார்.

Trending News