புதுடெல்லி: வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐ.ஐ.எம் கோழிக்கோடு (IIM Kozhikode) மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), திறந்த மனப்பான்மை, வெவ்வேறு கருத்துக்களுக்கு மரியாதை மற்றும் புதுமை ஆகியவை தான் இந்திய சிந்தனையின் சுமூகமான செயல் என்று கூறினார். இந்த உலகம் வெறுப்பு, வன்முறை, மோதல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபட விரும்பும் சூழ்நிலையில், இந்திய வாழ்க்கை முறை ஒரு நம்பிக்கையின் கதிர் போன்றது என்று பிரதமர் மோடி கூறினார். மோதலைத் தவிர்க்க இந்தியா ஒருபோதும் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் ஆலோசனை சக்திகளுடன் க;கலந்து பேசி மோதலைத் தவிர்த்தது என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் (Prime Minister), மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க பல தசாப்தங்கள் ஆனது. ஆனால் நமது அரசியலமைப்பு இந்த உரிமையை முதல் நாளிலிருந்து பெண்களுக்கு வழங்கியது. இதன் மூலம், இந்த உலகிற்கு நிறைய சிந்தனைகளை இந்திய அளித்துள்ளது. இன்னும் நிறைய வழங்கவும் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி, சமாதான செய்திகளை மகாத்மா காந்தி (Mahatma Gandhi) உலகுக்கு தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மக்கள் காந்திய கொள்கைகளிலிருந்து பலம் பெற்றனர் என்றும் கூறினார்.
பரஸ்பரம், சகோதரத்துவம், நீதி, சேவை மற்றும் திறந்த தன்மை ஆகியவை இந்தியாவின் முக்கிய சிந்தனைகளாக இருந்தன. இந்த மதிப்புகள் காரணமாக, இந்தியாவை உலகம் வரவேற்றது. ஆனால் மற்ற சில நாடுகள் அவ்வாறு செய்ய முடியாத நேரத்தில் நமது நாடு செழித்தது எப்படி? அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை கொடுத்ததே இதற்குக் காரணம் என்றார். இந்தியாவில் ஒருவர் தனது மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் காண முடியும் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இந்தியர்களின் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். நேர்மையான முயற்சிகளின் அடிப்படையில் நாட்டின் வனப்பகுதி அதிகரிப்பு மற்றும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.
இதனுடன், கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (Indian Institute of Management) எம்.டி.சி வளாகத்தின் முன் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) சிலையை பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.