நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: 2,000 பெட்ரோல் பங்க்குகள் காலி; மக்கள் சிரமம்

Petrol Diesel Shortage In India: நாட்டில் பெட்ரோல், டீசல் தீர்ந்து போய்விட்டதா? என்ன தான் நாட்டில் நடக்கிறது? 2,000 பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் காலியாகிவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 15, 2022, 04:21 PM IST
  • எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை குறைத்துள்ளது.
  • வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற முக்கிய பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: 2,000 பெட்ரோல் பங்க்குகள் காலி; மக்கள் சிரமம் title=

புது தில்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலையை விலையை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வரும் வேளையில், ​​தற்போது அதன் சப்ளையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

எப்படி என்றால், எரிபொருள் விலை சில நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வரும் சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் சப்ளையை குறைத்து வருவதாகத் தெரிகிறது. நாட்டில் பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் உட்பட ராஜஸ்தானில் சுமார் 2,000 பெட்ரோல் பம்புகள் செயல்படவில்லை. தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பொதுமக்கள், வியாபாரிகள் என பலர் பாதிபபுக்கு உள்ளாகி உள்ளனர். வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக எண்ணெய் நிறுவனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகல் ஒரு பக்கம்  எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: தரமற்ற பெட்ரோல் விற்பனை ? - சேலத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

எரிபொருள் சப்ளை செய்வதில் நெருக்கடி ஏன் ஏற்படுகிறது?
பெட்ரோலிய விநியோகஸ்தர்களின் கூற்றுப்படி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவை எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளன. மொத்த தேவையில் 33 சதவீதத்தை மட்டுமே நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களைப் பற்றி பேசுகையில், அவர்கள் ஏற்கனவே தங்கள் பெட்ரோல் பம்புகளில் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர்.

மேலும் படிக்க: பாலிதீன் கவரில் இருந்து பெட்ரோல்! கல்லூரி மாணவன் அசத்தல்!

இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும்:
ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களின் பெட்ரோல் பம்புகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மூடப்பட்டதே எண்ணெய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். ராஜஸ்தானில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் சுமார் 15 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் பெட்ரோல் பங்க் மூடப்பட்டதால், அதன் சுமை மற்ற நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் மீது வந்துள்ளது.

மேலும் படிக்க: பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ!

BPCL மற்றும் HPCL சப்ளையை குறைத்துள்ளது:
இந்தியன் ஆயில் நிறுவனம் முழு விநியோகத்தையும் வழங்குகிறது. ஆனால் BPCL மற்றும் HPCL ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விநியோகத்தை குறைத்துள்ளது. பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக, இரண்டு பெரிய நிறுவனங்கள் சப்ளையை மட்டுப்படுத்தியுள்ளதாகத தெரிகிறது.

மேலும் படிக்க: பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி; கை விரித்த வெளிநாட்டு வங்கிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News