தீவிரமடையும் குளிர் நடுவில் டெல்லி மக்களை மேலும் அதிர்சிபடுத்திய கனமழை...
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரோடு, காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகிறது. பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசு கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது.
இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லியில் காற்று தரக் குறியீடு 405-க்கு மேல் உள்ளது. காற்றின் தரக் குறியீடு, தொடர்ந்து மூன்றாவது நாளாக அபாயகரமான நிலையில் நீடிப்பதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு இது தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi: People take refuge at night shelters as cold wave intensifies in the national capital; visuals from a night shelter near Ramlila Maidan. pic.twitter.com/xy9Mo7roLU
— ANI (@ANI) January 6, 2019
ஞாயிற்றுக்கிழமை காலையில் (இன்று) டெல்லியிலும், அருகிலுள்ள பகுதியிலிருந்தும் பனி மூட்டம் ஏற்பட்டது, இதனால் 12 ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், விமானப் போக்குவரத்துப் போக்குவரத்து பாதிக்கப்படுவதைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
Delhi: Drizzling in parts of the national capital; #visuals from near Press Club of India and Rajpath pic.twitter.com/ZVsGbTXfNf
— ANI (@ANI) January 6, 2019
தேசிய தலைநகரில் குளிர் அலை தீவிரமடைந்துள்ளதால், வீடு அற்றவர்களுக்கு மக்கள் இரவில் முகாம்களில் அடைக்கலம் கொடுத்துள்ளனர். ராம்லீலா மைதானத்திற்கு அருகில் தங்குமிடம் ஒன்றையும் மக்களுக்காக அமைத்துள்ளனர்.