பிரியங்கா காந்தியை “இலவச பங்களா” என கிண்டல் செய்த ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல்

பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை கிண்டல் செய்யும் வகையில்  இலவச பங்களாவினால் மூக்குடைப்பட்ட பேத்தி என ட்வீட் செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 01:25 PM IST
  • காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை நடிகர் பரேஷ் ராவல் கிண்டல் செய்தார்
  • பரேஷ் ராவலின் ட்வீட் வைரலாகியது
  • சமூக ஊடக பயனர்கள் பலர் அதற்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
பிரியங்கா காந்தியை “இலவச பங்களா” என கிண்டல் செய்த ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல் title=

'இலவச பங்களா ...' என, பரேஷ் ராவல் ஜாடை மாடையாக பிரியங்கா காந்தியை தாக்கி பேசினார்.

பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை கிண்டல் செய்யும் வகையில்  இலவச பங்களாவினால் மூக்குடைப்பட்ட பேத்தி என ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ |  விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு புதன்கிழமை அன்று, மத்திய அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கிடையில், பாலிவுட் மூத்த நடிகர் பரேஷ் ராவல், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை இதற்காக கிண்டல் செய்து பேசியுள்ளார்.

பரேஷ் ராவல் தனது ட்விட்டர் கணக்கில்,  பேத்தி ஒரு இலவச பங்களாவில் தங்கி இருந்ததால்  மூக்குடைபட்டு நிற்பதாக் குறிப்பிட்டுள்ளார். பரேஷ் ராவலின் இந்த ட்வீட் குறித்து சமூக ஊடக கணக்கு வைத்திருக்கும் பல பயனர்கள் தனது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

இந்த கருத்தை பலர் பலமாக வரவேற்றுள்ளனர். பரேஷ் ராவலின் இந்த பதிவிற்கு உடனேயே 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை  பெற்றது.  3 ஆயிரம் பேர் அதனை ரீட்வீட் செய்துள்ளனர். அதே நேரத்தில் தொடர்ச்சியாக அந்து பதிவிற்கு, பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக, பரேஷ் ராவல் நாட்டின் வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று கூறினார். இந்த ட்வீட் தொடர்பாக பரேஷ் ராவல் சமூக ஊடக பயனர்களால் மிகவும் பாராட்டப்பட்டார்.

அரசின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் பிரியங்கா காந்தி தனது அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும். தில்லியில் உள்ள லோதி சாலையில் உள்ள பங்களாவை காலி செய்ய பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு SPG பாதுகாப்பு இல்லை. ஒரு மாதத்தில் அரசு பங்களாவை விட்டு வெளியேறாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பிரியங்கா காந்திக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News