இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை பாகிஸ்தான் தன்னிச்சையாக நிறுத்தியதற்கு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கண்டனம்!!
கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. போர் நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
#WATCH "For the last two months, Pakistan has stopped postal service from India. It's directly in contravention of the World Postal Union's norms," says, Union Minister Ravi Shankar Prasad pic.twitter.com/gm04ITuq3z
— ANI (@ANI) October 21, 2019
இதுகுயர்த்து அவர் கூறுகையில்; "பாகிஸ்தானின் முடிவு நேரடியாக சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது. ‘‘எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது’’ என்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கும் பிரசாத் செய்தி நிறுவனமான PTI பாகிஸ்தானின் முடிவு இந்தியாவுக்கு எந்த முன் தகவலும் இல்லாமல் இருந்தது என்றும் அவர் கூறினார்.