சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்!!
இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் உலககேகோப்பை கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் உலகக்கோப்பை இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் விஜய்சங்கர் ஆகிய இரு வீரர்கள் காயமடைந்து, புதிய வீரர்கள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையில் கூட, அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மூன்று முறை வாய்ப்பு இருந்தும் தனக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று விரக்தியில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு இன்று அறிவித்துள்ளார். இதுவரை 50 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு, 1694 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். மேலும், ஐந்து சர்வதேச டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், ராயுடு கடுமையாக போராடிய நம்பர்- 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் 4-வது இடத்திற்கு நிலையான பேட்ஸ்மேனை இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ளது. அம்பதி ராயுடுவை அந்த இடத்திற்கு தயார் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரின்போது மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஒன்றிரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை களம் இறக்கினர். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் களம் இறக்கியது. அதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை.
Indian middle-order batsman Ambati Rayudu has announced his retirement from all forms of cricket, he has written to BCCI pic.twitter.com/v4Wf3fwZ5i
— ANI (@ANI) July 3, 2019
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயத்தால் விலகியதால் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் வருங்காலத்திற்கான இந்திய அணியின் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காலத்திற்கான நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பந்தை சரியான வகையில் உருவாக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.