குஜராத் உயர்நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், தேச நலனுக்காகவும் நீதித்துறை எப்போதும் தனது கடமையை தவறாமல் செய்து வருகிறது என்று கூறினார்.
குஜராத் நீதிமன்றம் இந்தியாவின் ஜனநாயகம் இந்திய நீதி அமைப்பு ஆகிய இரண்டையும் வலுப்படுத்தியுள்ளது என குறிப்பிட்ட பிரதமர் மோடி (PM Narendra Modi), அரசியலமைப்பைப் பாதுகாக்கும் தனது பொறுப்பை நமது நீதித்துறை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது என பாராட்டினார்.
குஜராத் உயர் நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு மேம் மாதம் 1ம் தேதி நிறுவப்பட்டது.
நாட்டில் உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் உருவாக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நீதித்துறை எப்போதுமே அரசியலமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்
இது நாட்டின் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய விஷயங்களிலும், தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்களிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் திறன்பட செய்து வருகிறது என்றார்.
முன்னதாக, குஜராத் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
Our judiciary has always interpreted Constitution positively & creatively to strengthen it further. Be it safeguarding the rights of people of the country or when any situation arose where national interest needed to be prioritized, judiciary has always performed its duty:PM Modi pic.twitter.com/WMqs3QTKxe
— ANI (@ANI) February 6, 2021
ALSO READ | அகமதாபாத் நகராட்சி தேர்தல்: பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு டிக்கெட் மறுப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR