பஞ்சாப் பொற்கோயிலில் ராணுவம் தாக்குதல் நடத்தியதன் தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தியதன் 34-ம் ஆண்டு தினத்தையொட்டி சீக்கிய பயங்கரவாதிகள் என கூறப்படும் தால் கல்சா அமைப்பினரால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்க கூடும் என்பதால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி பல்வேறு வழிபாட்டு தலங்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தவிர இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாதுகாப்புபடையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.