பெட்ரோல் பங்க்கில் 500 ரூபாய் நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும்

பழைய ரூ.500 நோட்டுகள், நாளை இரவு மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு ரூபாய் நோட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

Last Updated : Dec 1, 2016, 12:14 PM IST
பெட்ரோல் பங்க்கில் 500 ரூபாய் நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும் title=

புதுடெல்லி: பழைய ரூ.500 நோட்டுகள், நாளை இரவு மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு ரூபாய் நோட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

கறுப்பு பணத்தை மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் பொது மக்களின் நலன் கருதி, ரூ.500 நோட்டு பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விமான டிக்கெட்களுக்கு பெறப்பட்டு வந்தது. இது பின்னர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு டிசம்பர் 15-ம் வரை நீட்டிக்கப்பட்டது. 

தற்போது இந்த கால அவகாசம் நாளை இரவு வரை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் ரூ.500 நோட்டு பெறப்படும் எனவும், விமான பயணங்களுக்கும் 2-ம்தேதி இரவு வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Trending News