புது தில்லி: இந்திய மக்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் பல மோசடிகள் அவ்வப்போது நடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மோசடி குறித்து சமீபத்தில் தெரிய வந்தது. இந்த மோசடி மற்றும் முறைகேடுகள் நாட்டு மக்களை வெகுவாக அதிசயிக்க வைத்தன.
இமயமலையில் வசிக்கும் ஒரு சாமியாரின் அறிவுரைகளின் பேரில் தேசிய பங்குச் சந்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த முடிவுகளில் ஒன்று தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் நியமனமாகும்.
ஆனந்த் சுப்ரமணியன் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் வியாழன் இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
சந்தை கட்டுப்பாட்டாளர் செபி-யின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) அறிக்கையில் வெளிவந்துள்ள புதிய உண்மைகளின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை கைது செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்ய முடிவெடுக்கும் முன்னர், சென்னையில் பல நாட்களுக்கு ஏஜென்சி அவர்கரிடம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனந்த் சுப்ரமணியன் முதலில் 2013 இல் என்எஸ்இ-ல் தலைமை செயலுத்தி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 இல் அப்போதைய நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவால் குழு இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2016 ஆம் ஆண்டில், முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தேசிய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறினார்.
மேலும் படிக்க | இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம்
இமயமலையில் உள்ள "யோகி" ஒருவருடன் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகவும், அவர் அறிவுரையின் பேரில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது.
செபியின் கூற்றுப்படி, ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் செயல்திறன் மதிப்பீட்டிற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அவரது சம்பளத்தில் "அடிக்கடி, தன்னிச்சையான மற்றும் விகிதாச்சாரமற்ற" உயர்வு ஆகியவை அந்த இமாலய சாமியாரின் அறிவுரையின் பேரில் எடுத்த சில குறிப்பிடத்தக்க முடிவுகளாகும்.
ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் அவரது தகுதியற்ற பதவி உயர்வு ஆகியவற்றில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்ததாக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் பலர் மீது செபி குற்றம் சாட்டியுள்ளது.
செபி, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ₹ 3 கோடியும், என்எஸ்இ, சுப்பிரமணியன், முன்னாள் என்எஸ்இ எம்டி மற்றும் சிஇஓ ரவி நரேன் ஆகியோருக்கு தலா ₹ 2 கோடியும் அபராதம் விதித்துள்ளது.
ஆனந்த் சுப்ரமணியம் யார்?
சித்ரா ராமகிருஷ்ணாவின் சில முடிவுகள் பற்றிய விவாதம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனந்த் சுப்ரமணியம் என்எஸ்இ-யில் பெரும் சம்பள உயர்வுடன் நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு தன்னிச்சையாக பதவி உயர்வு கிடைத்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இமாலய யோகி கூறியதால், அவர், NSE இல் 2வது இடத்துக்கு உயர்த்தப்பட்டார்.
எந்த அனுபவமும் இல்லாமல் பதவி உயர்வு கிடைத்தது
சுப்ரமணியத்திற்கு மூலதனச் சந்தையில் அனுபவம் இல்லை. இருப்பினும் அவருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் தொடர்ந்து கிடைத்தன. இரண்டே ஆண்டுகளில், அதாவது 2016ல் அவரது ஊதியத் தொகுப்பு ரூ.4.21 கோடியாக அதிகரித்தது. இதுமட்டுமின்றி, அவருக்கு குழு இயக்க அதிகாரி (GOO) பொறுப்பும் வழங்கப்பட்டது.
சுப்ரமணியனுக்கு பல நன்மைகள் கிடைத்தன
இந்தக் காலப்பகுதியில் சுப்ரமணியம் பல வசதிகளைப் பெற்றிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்தும் சென்னையிலிருந்தும் பணிபுரியும் வசதி இதில் ஒன்று. அவருக்கு வசதியாக பிரத்யேக அமைப்புகளை அமைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனந்த் GOO ஆன பிறகும் இந்த வசதியை தொடர்ந்து பெற்றார்.
அக்டோபர் 2016 இல் ராஜினாமா செய்தார்
என்எஸ்இ-யின் தணிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சுப்ரமணியத்தின் நியமனம் தவறான முறையில் செய்யப்பட்டது தெரிய வந்தது. விசாரணை அறிக்கையில் ஆய்வுக்குப் பிறகு, சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க | சித்ராவுக்கு சிக்கல்.. நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.. 'லுக் அவுட் நோட்டீஸ்'
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR