வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் யுன்-ன் அமெரிக்காவிற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் யுன்-ன் அமெரிக்காவிற்கு எதிரான "கடுமையான நிலைப்பாட்டினை" பாராட்டியதன் மூலம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளார்!
நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைப்பெற்ற சிபிஎம் மாவட்டக் குழு கூட்டத்தில் பேசியபோது இக்கருத்தினை வெளியிட்டார் விஜயன். மேலும் கிம், அமெரிக்காவால் கொடுக்கப்படும் அழுத்தத்தினை வெற்றிகரமாக கலையும் திறன் பாராட்டுக்குறியது எனவும் தெரிவித்துள்ளார்.
வட கொரியா அமெரிக்காவை எதிர்ப்பதில் சீனாவைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்திற்கு இடையே ஒரு கடுமையான வார்த்தை யுத்தம் நடந்துக்கொண்டிருக்க இதற்கு மத்தியில் கேரள முதலமைச்சரின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
"North Korea has been following tough anti USA agenda. North Korea has successfully defended the pressure imposed by US" said Kerala Chief Minister Pinarayi Vijayan at CPM Kozhikode district committee meeting (02.01.18) pic.twitter.com/6sj47sEefF
— ANI (@ANI) January 4, 2018