புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு கோலாகலமாக துவங்கியது. ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட ஜி20 குழு நாடுகளின் தலைவர்கள் தங்கள் ஆண்டு உச்சிமாநாட்டிற்காக புது தில்லி வந்துள்ளனர், இதில் கலந்துகொண்டுள்ள உறுப்பினர்களுக்கும், சீனாவிற்கும் இடையே வெளிப்படையாக தெரியும் பிளவுகளுக்கு இடையே, கூட்டமைப்பின் கூட்டம் தொடங்கியது.
2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழியாக ஜி20 கூட்டம் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், ஜி10 குழுவின் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தைக் கண்டறிவது கடினமாக உள்ளது. இந்தியாவின் தலைநகரம் பல அடுக்கு பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் போர், காலநிலை மற்றும் உலகளாவிய நிர்வாகம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!
"இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியானது, நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் 'சப்கா சாத்' இன் அடையாளமாக மாறியுள்ளது. இது இந்தியாவில், மக்களின் ஜி20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் இணைந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட நகரங்களில். நாட்டின், 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன. 'சப்கா சாத்' என்ற உணர்வுடன், ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20யில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
'Sabka Saath, Sabka Vikas’ can be mantra to transform global trust deficit: PM Modi at G20
Read @ANI Story | https://t.co/rJzryea6Fz#G20India2023 #G20SummitDelhi #PMModi #BharatMandapam pic.twitter.com/3gdwnTHv6p
— ANI Digital (@ani_digital) September 9, 2023
மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், தலைவர்களிடையே தனது கவலைகளை பகிர்ந்துக் கொண்டார். உறுப்பு நாடுகளுக்குள் சண்டைகள் மோதலைத் தூண்டும் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இது இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளாத ரஷ்யா மற்றும் சீனாவை சாடுவதாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி என பல தலைவர்கள் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்துளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் ஆகியோர் உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் உக்ரைன் நெருக்கடி காரணமாக உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!
இதற்கிடையில், சீனா நம்பகமான நாடு அல்ல என்றும், திபெத்தை ஆக்கிரமித்திருக்கும் சீனா தொடர்பாக ஜி20 மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள திபெத்திய சமூகத்தினர், தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. .
"எங்கள் நாட்டை சீனா கைப்பற்றியுள்ளது, அதனால்தான் சீனா நம்பகமான நாடு இல்லை என்ற செய்தியை நாங்கள் வழங்க விரும்புகிறோம்" என்று புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த திபெத்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் கோன்போ துண்டுப் கூறியதை மேற்கோளிட்டு, ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ