FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - | Last Updated : Dec 20, 2019, 10:05 AM IST
FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

ஒரு நிமிட வாசிப்பு: இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு

உன்னாவ் பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது இன்று தீர்ப்பு… தண்டனை விவரம் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இறுதிவாதம்
 
அயோத்தியில் 2007 நவம்பர் 23ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு… பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச நிலையில் ஆயத்தம்
 
பீமசேனை தலைவர் சந்திரசேகர் இன்று ஜமாத் மசூதியிலிருந்து ஜந்தர்மந்தர் வரை நடைப்பயணம்

குடியிரிமை சட்டத்தை எதிர்த்து ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்
 
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
 
லக்னௌவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்முறை… பரிவர்த்தன் சௌக், ஐடி இன்டர்செக்சன், கேடி சிங் பாபு ஸ்டேடியம் பகுதியில் பொதுச்சொத்துக்கள் தீக்கிரை
 
தில்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்ட அறிவிப்பு… போலீஸ் அனுமதி மறுப்பால் பதற்றம்
 
ஜாமியா கலவரம் குறித்து தில்லி போலீஸ் பரபரப்பு அறிக்கை - வன்முறை குறித்து வதந்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
 
குஜராத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் போலீஸார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
 
வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் மீது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி பாய்ச்சல்… பாஜகதான் காரணம் என அகிலேஷ்யாதவ் பதிலடி
 
மக்கள்தொகை பெருக்கத்தை தடுக்க நிதி ஆயோக் புதிய திட்டம்… இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்
 
உத்தரப்பிரதேசம் சோன்பாத்ரா அன்பாரா மின்நிலையத்தில் திடீர் தீ… பராமரிப்பு பணியின்போது பாய்லர் வெடித்ததால் பரபரப்பு
 
காஜியாபாத் நந்த் கிஷோர் குஜ்ஜர் கொலை மிரட்டல் விடுத்ததாக நகராட்சித்தலைவர் ரஞ்சிதா தாமா புகார்.. உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உத்தரப்பிரதே முதல்வர் யோகியிடம் முறையீடு
 
உத்தரப்பிரதேச பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் அமளி.. குடியுரிமை சட்டம் உள்பட பல பிரச்னைகள் தொடர்பாக ரகளையால் காலவரையற்ற ஓத்திவைப்பு.
 
தில்லியில் கடும் பனிமூட்டத்தால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு… விமான சேவை பாதிப்பு … 29 இண்டிகோ விமானங்கள் ரத்து
 
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஜெய்ப்பூரில் ஏபிவிபி பேரணி… ஏராளமானோர் பங்கேற்பு
 
ஜெய்ப்பூர் வெடிகுண்டு வழக்கில் வாதங்கள் நிறைவு… குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் இன்று பதிவு… மரணதண்டனைக்கு அரசு தரப்பு பரிந்துரை
 
மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் புதிய கோரிக்கை.. விசாரணைக்கு ஆஜராக விலக்கு கேட்டு மனு

ராஜஸ்தானின் ஹனுமன்காரில் பேருந்துடன் ஜீப் மோதி விபத்து… இரு பெண்கள் பலி… 8 பயணிகள் படுகாயம்

பிகார் தலைநகர் பாட்னாவில் இடதுசாரிகள் பந்த்தில் வன்முறை… அரசு வாகனங்களை அடித்து சேதம்.. பொது வாகனங்கள் தீக்கிரை
 
பிகாரில் இடதுசாரிகள் நேற்று ஒருநாள் அடையாள பந்த்… அமைதியாக சென்றதாக போலீஸார் அறிக்கை… 400 பேர் மீது வழக்குப்பதிவு
 
ஜார்க்கண்ட்டில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்புக்கு இடையே 16 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல்
 
மத்தியப்பிரதேசத்தில் 23 ஆயிரத்து 330 கோடி மதிப்பீட்டில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்… விவசாயிகள் நிவாரணத்துக்கு ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு
 
மத்தியப்பிரதேச பேரவையில் விவசாயிகள் பிரச்னையால் அமளி… கோதுமைக்கு கூடுதல் விலை கேட்டு வலியுறுத்தல்

வேலைவாய்ப்பை அதிகரிக்க கோரி பாஜக இளைஞரணி இந்தூரில் பேரணி.. போலீஸார் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு
 
சத்தீஸ்கரில் 24 லட்சம் டன் அரிசி கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்… மானியத்துக்கு மறுப்பு… கூடுதலாக 12 லட்சம் டன் கொள்முதலுக்கு மாநில அரசு கோரிக்கை
 
மத்தியப்பிரதேசத்தின் மக்கன்லால் சதுர்வேதி நேஷனல் யுனிவர்சிட்டியில் 23 மாணவர்கள் நீக்கம் தொடர்பான பிரச்னையில் சுமுக முடிவு… மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற பல்கலை நிர்வாகம் பரிந்துரை
 
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மங்களூர் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை… இருவர் பலி
 
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… ஏராளமான அமைப்புகள் பங்கேற்பு

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News